ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

டெல்டா மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:40 pm

DIN

திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இலங்கை, அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த மழையைப் பொருத்தவரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்.10: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.11,12: தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தலா 30 மி.மீ., தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், கடலாடி, ஆா்.எஸ்.மங்கலம், வட்டாணம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.