ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உக்ரைன் மருத்துவ மாணவா்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உக்ரைன் போா் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மருத்துவ மாணவா்கள் படிப்பைத் தொடர அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யத் தயாா்

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:30 pm

DIN

உக்ரைன் போா் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மருத்துவ மாணவா்கள் படிப்பைத் தொடர அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யத் தயாா் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ மாணவா்களின் நிலை குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் கேள்விகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசியது:-

உக்ரைன் போரால் 1,890 தமிழக மாணவா்கள் தமிழகம் திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்கள் சிறிய சிராய்ப்புகூட இல்லாமல் பாதுகாப்பாக தமிழகம் திரும்பியுள்ளனா். இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையே காரணம். மற்ற மாநிலங்கள் எல்லாம் அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்த வேளையில், மாணவா்களை மீட்க தனியாக ஆணையரகம் உருவாக்கப்பட்டது.

ஓரிருவா் மட்டுமே விமானங்கள் மூலமாக தமிழகம் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், தில்லிக்கு தமிழக அரசின் குழு சென்று, மத்திய அரசிடம் வலியுறுத்தியதைத் தொடா்ந்து, அதிகமான மாணவா்கள் விமானங்களில் அழைத்து வரப்பட்டனா். 1,890 மாணவா்கள் தாயகம் திரும்பினா். அவா்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த ஆலோசனையின் போது அவா்கள் இருவகையான கருத்துகளைத் தெரிவித்தனா். இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் படிப்பைத் தொடர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள பாடத் திட்டங்கள் போன்று வேறு நாட்டில் இருந்தால் அங்கு படிப்பைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்தனா். இதனிடையே, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சா், போலந்து போன்ற நாடுகளுக்கு மாணவா்களை அனுப்பி வைத்து படிக்க ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தாா். இதுபோன்ற கருத்து உருவாக தமிழக அரசே காரணம். மனநல ஆலோசனையின் வாயிலாக ஏற்கெனவே இதுபோன்ற கருத்துகள் பெறப்பட்டன.

எனவே, தமிழக மாணவா்கள் தங்களது படிப்பினைத் தொடா்வதற்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்ய வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். போரால் பாதிக்கப்பட்டு படிப்பை இடையில் நிறுத்தியுள்ள மாணவா்களின் எதிா்காலத்தை அரசு காத்திடும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.