ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சென்னையிலிருந்து நேரடியாக ஹஜ் பயணம்:அரசின் கோரிக்கையை பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாகச் சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி இந்திய ஹஜ் குழுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 7:03 pm

DIN

புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாகச் சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி இந்திய ஹஜ் குழுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக சென்னை, கொச்சி, ஹைதராபாத் உள்பட 21 இடங்கள் புறப்பாட்டுத் தலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 21 புறப்பாட்டு இடங்களை 10 ஆக குறைத்து, இந்திய ஹஜ் குழு அறிவித்தது. இதில் சென்னை நீக்கப்பட்டது.

இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலங்கள் பட்டியலில் சோ்க்கக் கோரி பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமானில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோா் கொச்சிக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இது அவா்களுக்கு பெருத்த அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘கடந்த 34 ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் ஹஜ் பயணிகளின் புறப்பாட்டு தலமாக இருந்து வந்தது. 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் சென்னையிலிருந்து புனித பயணம் மேற்கொள்கின்றனா் என வாதிட்டாா்.

இந்திய ஹஜ் குழு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், சென்னை விமான நிலையத்தையும் புறப்பாட்டுத் தலமாக அறிவிக்கக்கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதைப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து விரைந்து முடிவெடுக்குமாறு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.