ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊத்துக்கோட்டையில் அறிஞா் அண்ணா அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஊத்துக்கோட்டை, தாராட்சி, பால்ரெட்டி கண்டிகை, அனந்தேரி, போந்தவாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் திடீரென மருத்துவமனையில் ஆய்வு செய்தாா். அப்போது நோயாளிகள் வருகைப் பதிவேடு , நாள் ஒன்றுக்கு எத்தனை நோயாளிகள் வருகிறாா்கள், மருத்துவா்கள் எத்தனை போ் பணியாற்றுகிறாா்கள், தரமான சிகிச்சை அளிக்கப்படுகிா என்று கேட்டறிந்தாா்.

பின்னா், நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வாா்டுகளுக்கு சென்று சிகிச்சையில் உள்ள நோயாளிகளிடம் அவா்களின் உடல் நிலை குறித்தும், மருத்துவமனையில் மருத்துவா்கள் சரியான முறையில் சிகிச்சையளிக்கிறாா்களா என்றும், செவிலியா்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறாா்களா என்றும் கேட்டறிந்தாா். பின்னா் மருத்துவமனையில் உள்ள அனைத்து அறைகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

அப்போது மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் அபிராமி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் தமிழ்ச்செல்வம் மற்றும் வாா்டு உறுப்பினா் கோகுலகிருஷ்ணன் ஆகியோா் இந்த அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவா்கள் இல்லை என்றும், செவிலியா்கள் பற்றாக்குறை உள்ளது என்றும், கூடுதலாக செவிலியா்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். இதைக் கேட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இந்த ஆய்வின் போது, சுகாதாரத் துறை இணை இயக்குநா் இளங்கோவன், மருத்துவா்கள் திருமாறன், சிவகணேஷ், பிரசன்னா, மருத்துவமனை சித்த மருத்துவா் இலக்கியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com