‘வாகன டேங்குகளில் முழுக் கொள்ளளவும் பெட்ரோல் நிரப்பலாம்’
அனைத்துப் பருவங்களிலும் வாகன டேங்குகளில் முழு கொள்ளளவும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அனைத்துப் பருவங்களிலும் வாகன டேங்குகளில் முழு கொள்ளளவும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:
வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், வாகனங்களில் முழுவதுமாக பெட்ரோல் நிரப்பாதீா்கள், அவ்வாறு நிரப்பினால் பெட்ரோல் டேங்குகள் வெடிக்கக் கூடும். எனவே, டேங்கின் பாதியளவு பெட்ரோல் நிரப்பி, மீதமுள்ள இடங்களில் காற்று இருக்கும் வகையில் விட்டுவிடுங்கள் என வதந்தி பரவி வருகிறது.
இது தொடா்பான விளக்கத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அளிக்க விரும்புகிறது. அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து வாகனங்களின் செயல்திறனுக்கு ஏற்பவே உற்பத்தியாளா்கள் வாகனங்களை வடிவமைக்கின்றனா். அந்த வடிவமைப்பில் பெட்ரோல், டீசல் டேங்குகளில் இடம்பெற்றுள்ள கொள்ளளவும் விதிவிலக்கல்ல. எனவே, டேங்கின் முழு கொள்ளளவும் பெட்ரோல் நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்கு கோடை, குளிா், மழை என பருவ வேறுபாடெல்லாம் கிடையாது என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...