தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி கோனேரிப்பட்டியில் புனித சலேத் அன்னை தேவாலயத்திலிருந்து குருத்தோலை ஞாயிறு பவனி தொடங்கி, தம்மம்பட்டி திருமண்கரடு புனித அந்தோனியார் ஆலயம் வரை நடைபெற்றது.
இந்த பவனியில் உலக மீட்பர் கலைக்குழுவினர் இயேசு மற்றும் சீடர்கள் வேடமணிந்து கோவேறு கழுதையில் பவனி வந்தனர்.
அந்தோணியார் ஆலயத்தில் கோனேரிப்பட்டி பங்குத்தந்தை இன்னாசிமுத்து, மண்ணின் மைந்தர் அருட்தந்தை சிரில், திருத்தொண்டர் இரஞ்சித் திருப்பலி நிறைவேற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.