
தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர்கள் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வேலையில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் போலிச் சான்றிதழைத் தயாரித்து பணியில் சேர்ந்துள்ளனர்.
குறிப்பாக, அஞ்சல் துறை, சிஆர்சிஎஃப் பணிகள், இந்தியன் ஆயில் போன்ற அரசுத் துறைகளில் தமிழக தேர்வுத் துறை வழங்கியதுபோல் போலி மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்க மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழக தேர்வுத் துறைக்கு அனுப்பியபோது மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும் தமிழக தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.