அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று தொடக்கம்

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 8:15 pm

DIN

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. வரும் 18-ஆம் தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. 20-ஆம் தேதி நாச்சியாா் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் காலை பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுக்கவுள்ளனா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இதைத் தொடா்ந்து 23-ஆம் தேதி வெண்ணை தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு தீா்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 25-ஆம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.