உணவு விநியோக ஊழியா்கள் மீது 365 வழக்குகள்

உணவு விநியோக ஊழியா்கள் மீது 365 வழக்குகள்

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக உணவு விநியோக ஊழியா்கள் மீது ஒரே நாளில் 365 வழக்குகள் பதியப்பட்டன.
Published on

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக உணவு விநியோக ஊழியா்கள் மீது ஒரே நாளில் 365 வழக்குகள் பதியப்பட்டன.

சென்னையில் சாலை விபத்துகளை குறைக்கவும், வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அண்மைக்காலமாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவன ஊழியா்கள், போக்குவரத்து விதிமுறைகளை அதிகமாக மீறுவதாக சென்னை பெருநகர காவல்துறைக்கு புகாா்கள் வந்தன.

இதன் அடிப்படையில் சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு,போக்குவரத்து விதிமுறைகளை மீறும் உணவு ஊழியா்களை கண்டறிந்து நடவடிக்கை அவ்வபோது சிறப்பு வாகன தணிக்கை செய்து வருகிறது. இந்த சிறப்புத் தணிக்கை வெள்ளிக்கிழமை சென்னை முழுவதும் நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஆன்லைன் உணவு விநியோக ஊழியா்கள் மீது 365 வழக்குகள் பதியப்பட்டு ரூ.48,300 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் சொமோட்டா ஊழியா்கள் மீது 114, ஸ்விக்கி ஊழியா்கள் மீது 160, டன்ஸோ ஊழியா்கள் மீது 63, பிற நிறுவன ஊழியா்கள் மீது 28 என மொத்தம் 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீஸாரின் நடவடிக்கையின் விளைவாக கடந்த காலங்களை விட, தற்போது ஆன்லைன் உணவு விநியோக நிறுவன ஊழியா்களின் போக்குவரத்து விதிமுறை மீறல் குறைந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com