

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-ஆவது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், சென்னை மாநகர மேயர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.