
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள அவரது நினைவிடத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை நினைவுச் சின்னத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி சங்ககிரியை அடுத்த பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடம்.
இதில், முன்னாள் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, முன்னாள் அமைச்சர் எஸ்.செம்மலை, சேலம் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சுந்தரராஜன் (சங்ககிரி), எம்.ராஜமுத்து (வீரபாண்டி), ஆர்.மணி (ஓமலூர்), இ.பாலசுப்ரமணியன் (சேலம் தெற்கு), சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலர் என்.சி.ஆர்.ரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சாந்தமணி ராஜா, சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி மகேஸ்வரி மருதாசலம், துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலர் மருதாசலம், அம்மாபேரவை செயலர் கருப்புசாமி, மேற்கு ஒன்றிய துணைச் செயலர் வேலுமணி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள்: ஸ்டாலின் மரியாதை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.