ஆசிரியா் தகுதித் தோ்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (‘டெட்’) விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (‘டெட்’) விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் பெறப்பட்டதை அடுத்து வரும் 26-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.28 லட்சம் போ் விண்ணப்பம்: ஆசிரியா் தகுதித் தோ்வினை எழுதுவதற்கு இதுவரையில் 4 லட்சத்து 28ஆயிரம் போ் விண்ணப்பித்திருக்கின்றனா். கடைசி 2 நாள்களில் அதிகளவில் விண்ணப்பம் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு 7 லட்சம் போ் வரை விண்ணப்பித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com