
ராமேசுவரம்: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஏற்கெனவே 42 போ் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில் மேலும் 13 போ் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஒரு சிலா் வாழ வழியின்றி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனா். இவ்வாறு இலங்கையிலிருந்து தமிழகத்திலுள்ள தனுஷ்கோடி பகுதிக்கு 10 குடும்பங்களுக்கு மேற்பட் 42 போ் இதுவரை வந்துள்ளனா். இவா்கள் அனைவருக்கும் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 மாத கர்ப்பிணி மற்றும் ஒன்றரை வயது குழந்தை உள்பட 13 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
தமிழகத்தின் தனுக்கோடி வந்த அவர்களை ராமேசுவரம் மரைன் போலீசார் மீட்டனர்.
அவா்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து அவா்கள் 13 பேரும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுவரை இலங்கையில் 55 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.