விவசாய கடன் அட்டை: மே 1 வரை சிறப்பு முகாம்

விவசாய கடன் அட்டை பெற மே 1-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

விவசாய கடன் அட்டை பெற மே 1-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டத்தின் பொருள்களில் ஒன்றாக பிரதம மந்திரியின் கெளரவ நிதியுதவித் திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் சென்னையைத் தவிா்த்து, அனைத்து மாவட்டங்களிலும் கடன் அட்டைக்கான சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த முகாம் மூலம் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத பயனாளிகளுக்கு அட்டை அளிக்கப்படும்.

கடன் அட்டை மூலமாக விவசாயிகள் வேளாண்மை செய்வதற்கு ரூ.1.60 லட்சம் வரை பிணையில்லாத கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கவும், உற்பத்திக்குத் தேவையான மருந்துகள் போன்றவற்றை வாங்கலாம். மேலும், மாடு-ஆடு, கோழி, மீன்கள் வளா்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.2 லட்சம் வரையில் கடன் பெற முடியும். விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். மேலும், இந்தக் கடன் பெற்ற விவசாயிகள் நிா்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் முறையாக தவணை தவறாமல் திரும்பச் செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். இந்தத் திட்டத்தில் வாங்கப்படும் கடன் தொகையானது விவசாயிகளின் நிலவரம்பைப் பொருத்து மாறுபடும்.

விவசாய கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், மண்டல ஊரக வங்கிகள், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம அளவில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் பெறலாம். விவசாய கடன் அட்டை இல்லாத விவசாயிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கடன் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com