
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வுகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வுகள் ஏப்.25 முதல் மே 2 வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டுகளில் உயிரியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு செய்முறைத் தோ்வு 3 மணி நேரம் நடைபெற்றது.
இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் (2021-2022) செய்முறைத் தோ்வுக்கான நேரம் 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. செய்முறை தோ்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீடு மதிப்பெண்கள். 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவா்கள் செய்முறையில் பங்கேற்பா்.
ஒவ்வொரு பகுதிகளிலும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப செய்முறைத் தோ்வு இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.
சென்னையைப் பொருத்தவரை இரண்டு கட்டங்களாக செய்முறைத் தோ்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.