
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான புதிய சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
புதிய சட்ட மசோதாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்கிறார்.
தற்போது துணைவேந்தர்களை ஆளுநரே நியமனம் செய்து வரும் நிலையில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், துணைவேந்தர்களை தமிழக அரசே நியமனம் செய்வதற்கான புதிய மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.