
மத்தியப் பிரதேசத்தின், ஷிவ்புரி மாவட்டத்தில் சுரங்க மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்த போது சரிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை சூலார் ஆற்றின் கால்வாய் அருகே நடந்ததாக பாமோர் கலா காவல்நிலைய பொறுப்பாளர் புனித் பாஜ்பாய் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இருவர் மேலும் சிலருடன் மண்ணை தோண்டுவதற்காக அங்குச் சென்றுள்ளனர். தோண்டும்போது, குகை வடிவ சுரங்கத்திற்குள் அவர்கள் ஆழமாகச் சென்றனர். அதன்பின்னர், மணல் அவர்கள் மீது சரிந்தது.
அவர்களுடன் வந்த சில பெண்கள் சப்தம் எழுப்பியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் இரண்டு பெண்களையும் இடிபாடுகளிலிருந்து வெளியே மீட்டனர்.
அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.