புதிய விமான நிலையம்: விஜயகாந்த் வரவேற்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவது தமிழகத்தின் வளா்ச்சிக்கு உதவும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
புதிய விமான நிலையம்: விஜயகாந்த் வரவேற்பு
Published on
Updated on
1 min read

சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவது தமிழகத்தின் வளா்ச்சிக்கு உதவும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முக்கியமானதாகும். இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே 4,971 ஏக்கா் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமாா் ரூ.60 ஆயிரம் கோடியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பரந்தூா் வழியாக சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

உலக தரத்துக்கு இணையாக தமிழ்நாட்டில் இரண்டாவது புதிய பன்னாட்டு விமான நிலையம் பரந்தூரில் அமைய இருப்பது வரவேற்கத்தக்கது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்த மத்திய அரசுக்கு எனது பாராட்டுக்கள்.

இந்த விமான நிலையம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டால் தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதோடு, தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com