குற்றால சாரல் திருவிழா: மலர் கண்காட்சி தொடங்கியது

குற்றால சாரல் திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தென்காசி: குற்றால சாரல் திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நாளை மறுநாள்(ஆகஸ்ட் 6) வரை தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சீசனின்போது அருவிகளில் தண்ணீா் இல்லாத காரணத்தால் சாரல் திருவிழா நடைபெறவில்லை. அடுத்த இரு ஆண்டுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தொடா்ந்து 3 ஆண்டுகள் குற்றாலத்தில் சாரல்திருவிழா நடத்தப்படவில்லை.

நிகழாண்டு இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில், தென்காசி மாவட்டம் உருவான பிறகு முதன்முறையாக சாரல்திருவிழா நடத்த மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடா்பா ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளதாவது: குற்றாலம் சாரல் திருவிழா பொதிகை பெருவிழா 2022 என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை (ஆக. 5) தொடங்குகியது. இவ்விழா, ஆக. 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சாரல்திருவிழாவில் உள்ளடக்கமாக உணவுத்திருவிழா, புத்தகத் திருவிழா ஆக.5-14 வரையிலும், தோட்டக்கலை திருவிழா ஆக.6-8 வரையிலும், நடைபெறுகிறது.

சாரல்திருவிழா குற்றாலம் கலைவாணா் அரங்கிலும், உணவுத்திருவிழா ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி அருகேயுள்ள ஜமீன் பங்களா வளாகத்திலும், தோட்டக்கலை திருவிழா குற்றாலம் ஐந்தருவியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவிலும், புத்தகத் திருவிழா குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி அரங்கிலும் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com