
கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால், இடுக்கி அணைக்கு உபரி நீர் விநாடிக்கு, 2,228 கன அடியாக அதிகரிப்பு செய்து சனிக்கிழமை திறந்து விடப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்வை கட்டுப்படுத்த ரூல் கர்வ் நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இரண்டாவது நாளான சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் விநாடிக்கு, 2,228 கன அடியாக வெளியேற்றப்பட்டது.
சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்,138.10 அணியாகவும் (மொத்த உயரம் 142 அடி), அணையில் நீர் வரத்து விநாடிக்கு, 5,285 கன அடியாகவும், இருந்தது, அணையில் ,6,640.20 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. பெரியாறு அணையில் 12.4 மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 11.6 மி.மீ., மழையும் பெய்தது.
அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு ,2,122 கன அடி தண்ணீரும், நீர் வழிபோக்கிகள் மூலம் இடுக்கி அணைக்கு உபரி நீர் விநாடிக்கு, 2,228 கன அடியாக திறந்து விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.