செஸ் ஒலிம்பியாட்: அனைத்து வீரர்களுக்கும் கீழடி மொழிபெயர்ப்பு புத்தகம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைத்து நாட்டு வீரர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்வு மொழிபெயர்ப்பு நூல் பரிசாக வழங்கப்பட்டன. 

கீழடி ஆய்வு நூலுடன், திருக்குறள் மொழிபெயர்ப்பு புத்தகமும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த இரு நூல்களும் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னைக்கு அருகேவுள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில், 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், அவர்களுடன் விருந்தினர்களும் பங்கேற்றுள்ளனர். தற்போது 10வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைத்து நாட்டு வீரர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்வு மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களின் மொழிபெயர்ப்பு நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. 

இவை ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகியவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் தமிழ்நாட்டின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் அறிய இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com