
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவினர் கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு பிரிவினருக்கு ஆகஸ்ட் 20 முதல் 23 வரை நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கான பணிகள் அனைத்தும் அக்டோபர் 24ஆம் தேதியுடன் நிறைவுபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆகஸ்ட் 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.