மேட்டூரில் 600 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடி ஊர்வலம்: 1000 பேர் பங்கேற்பு

மேட்டூரில் 75-ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு 600 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
மேட்டூரில் 600 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடி ஊர்வலம்: 1000 பேர் பங்கேற்பு


மேட்டூர்: மேட்டூரில் 75-ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு 600 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர நாள் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேட்டூரில் 600 அடி நீளம் 9 அடி அகலம் கொண்ட தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. 

இந்த தேசிய கொடியினை மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், வருவாய்த்துறை, காவல்துறை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தேசியக் கொடிமை கையில் ஏந்தி ஊர்வலமாக நடந்து சென்றனர். 

இந்த ஊர்வலமானது சார் ஆட்சி அலுவலகத்தில் தொடங்கி மேட்டூர் பேருந்து நிலையம், காந்தி சிலை, சின்ன பார்க், நான்கு ரோடு வழியாகச் சென்று மீண்டும் சார் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.

தேசப்பற்றும் தேசியக் கொடியைப் பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த ஊர்வலம் நடைபெற்றது என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். 

நிகழ்ச்சியில் சார் ஆட்சியர்  வீர் பிரதாப் சிங் , எம்எல்ஏ சதாசிவம், மேட்டூர் நகர மன்ற துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com