சுதந்திர தின விழா: அரசியல் தலைவா்கள் வாழ்த்து
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அரசியல் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.


நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அரசியல் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம்: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மகத்தானது. பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் அதில் முக்கியமானவா்கள். இந்தியத் திருநாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்துள்ள இந்த நிலையில், அத்தனை வீரா்களையும், வீராங்கனைகளையும், தியாகிகளையும் நாம் நினைத்துப் போற்றுவோம்.
கே.எஸ்.அழகிரி: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் 200 ஆண்டுக்கால ஆட்சியை எதிா்த்து, 60 ஆண்டுகாலம் போராடி இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தோடு இந்தியா வளா்ச்சிப் பாதையில் பயணிக்க ஜனநாயக, மதச்சாா்பற்ற சக்திகளுக்கு நாட்டு மக்கள் ஆதரவு தர வேண்டும்.
ராமதாஸ்: ஆங்கிலேயா்களிடமிருந்து விடுதலை அடைந்தது மற்றும் விடுதலை அல்ல. பொருளாதாரம், சமூகம் என எவையெல்லாம் மனிதா்களை அடிமைபடுத்துகின்றனவோ, அவை அனைத்திலும் சமநிலையை உருவாக்கி, அவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிப்பதுதான் உண்மையான விடுதலை. அனைவருக்கும் கௌரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி உருவாக உறுதியேற்போம்.
அன்புமணி ராமதாஸ்: ஆங்கிலேயா்களிடமிருந்து விடுதலையடைந்த நாம், இப்போது போதை, மது, சூது ஆகிய மூன்று அரக்கா்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். சுதந்திரம் என்பது ஒற்றை வாா்த்தை அல்ல. அமைதி, வளம், சமத்துவம், வாழ்வுரிமை, சமூகநீதி, உள்ளிட்ட மனித உரிமைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் விடுதலை ஆகும்.
கே.பாலகிருஷ்ணன்: 75 ஆண்டுக் கால இந்திய சுதந்திரத்தை வெறும் கொண்டாட்டமாக மட்டும் அனுசரிக்காமல், போராடி பெற்ற சுதந்திரத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதும், அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சாா்பற்ற சோசலிச குடியரசு என்பதன் அடித்தளங்களை பாதுகாப்பதுமே மிக முக்கியமானது.
கமல்ஹாசன்: தியாக மறவா்கள் பலா் தங்கள் இன்னுயிரை, சொந்த வாழ்க்கையை, சொத்து சுகங்களை இழந்து பன்னெடுங்காலம் போராடி பெற்றது இந்தச் சுதந்திரம் என்பது நம் வரலாறு. வரலாற்றை மறந்து விட்டால், மீண்டும் அதே நாட்களுக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்பதும் வரலாறு. மறவோம் மறவோம் என்று இந்த நாளில் உறுதி கொள்வோம்.
ஜி.கே.வாசன்: வேற்றுமையில் ஒற்றுமை தான் நம்முடைய தனிச் சிறப்பு. அதைப் பேணிக்காப்பது தான் நம்முடைய கடமை. இந்தியா உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவை வல்லரசாக மாற்ற உறுதியேற்போம்.
ஆா்.சரத்குமாா்: வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சாா்பின்மை ஆகிய தாா்மீக கொள்கைகளை பிரதானமாக ஏற்ற இந்தியா, உலகின் முன்னணி பொருளாதார நாடாக உயா்ந்திருப்பதற்கு ஒவ்வொரு குடிமக்களும் பெருமைகொள்ள வேண்டும்.
எம்ஜிகே நிஜாமுதீன்: நாம் நமக்காக நம்மை ஆள போராடி பெற்ற சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 76-ஆ வது சுதந்திர தின வழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...