ராமஜெயம் கொலை வழக்கு: கிடைத்திருக்கும் ஒரே துப்பு மாருதி சுசூகி வெர்ஸா 

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய தடயமாக, கொலையாளிகள் மாருதி சுசூகி வெர்ஷா மாடல் காரைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
கிடைத்திருக்கும் ஒரே துப்பு மாருதி சுசூகி வெர்ஸா 
கிடைத்திருக்கும் ஒரே துப்பு மாருதி சுசூகி வெர்ஸா 


கோவை: அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய தடயமாக, கொலையாளிகள் மாருதி சுசூகி வெர்ஷா மாடல் காரைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1,400 பேர் மாருதி சுசூகி வெர்ஷா மாடல் காரை வைத்துள்ளனர். இவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் கோவையில் மட்டும் 250 பேர் இந்த மாடல் காரை வைத்திருப்பதாகவும், அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், 2012 மாா்ச் 29-ஆம் தேதி காலை நடை பயிற்சி சென்றபோது, மா்ம நபா்களால் கடத்தி, கை கால்களை கட்டி கொலை செய்யப்பட்டாா்.

சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கொலை வழக்கு விசாரணையில், இதுவரை குற்றவாளிகள் யார் என்று எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. முதலில் உள்ளூா் போலீஸாா், பின்னா் சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், சிபிஐ விசாரணைக்கு  மாற்றப்பட்டது. ஆனால், சிபிஐ போலீஸாராலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் குற்றவாளிகள் பயன்படுத்திய கார் பற்றி துப்புக் கிடைத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அந்த மாடல் காரை வைத்திருக்கும் 1400 பேரிடம் விசாரணைநடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com