
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடைவார்கள் எனவும் ஆதி திராவிடர் நலத் துறை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடையும்
வகையில், தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.