பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான முதல்வரின் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயா்கல்வியின் வளா்ச்சி தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்களுடன் கலந்தாலோசனை நடத்துவதற்கான கூட்டம் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆக.17-இல் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பாா் என்றும் உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்திருந்தாா்.
ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலினின் தில்லி பயணத்தையொட்டி இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து உயர்கல்வி மேம்பாடு குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவது, உயர்கல்வியில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.