பச்சை சாத்தி கடைசல் சப்பரம்
பச்சை சாத்தி கடைசல் சப்பரம்

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி வீதியுலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளினார்.
Published on

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளினார்.

ஆவணித் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். 

<strong>வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரம்</strong>
வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரம்

முக்கிய  நிகழ்வாக செவ்வாய்க்கிழமை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு மாலையில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். 

<strong>சிவப்பு சாத்தி தங்க சப்பரம்</strong>
சிவப்பு சாத்தி தங்க சப்பரம்

புதன்கிழமை எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை வெள்ளைச் சாத்தி பெரிய வெள்ளிச்சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற ஆக. 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com