திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற ஆவணித் திருவிழா கடந்த ஆக. 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு பிள்ளையார் தேரும், காலை 6.45 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரிலும், காலை 7.50 மணிக்கு வள்ளியம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.