கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

இயக்குநர் பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

சென்னை தியாகராயர் நகர் தனியார் மருத்துவமனையில் இருந்து இயக்குநர் பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 1:52 pm

சென்னை தியாகராயர் நகர் தனியார் மருத்துவமனையில் இருந்து இயக்குநர் பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

தமிழின் புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறி குணச்சித்திர வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தவாக பாரதிராஜா நடித்திருந்தார். 

படத்தில் இவர் பேசும் வசனங்களுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 24ஆம் தேதி பாரதிராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து தியாகராயர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பாரதிராஜாவை சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து, விரைவிலேயே குணமடைந்து அவர் வீடு திரும்புவார் என்கிற தகவலை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.