
பொதுவாக வாகனத்தை இரவல் வாங்குவதும் இரவல் கொடுப்பதும் வழக்கமான விவகாரம்தான். ஆனால், இரவல் கொடுக்கும் வாகனத்தால் சிலர் சின்ன சின்ன சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அதனைத் தடுக்க, தவிர்க்க ஈரோடு காவல்துறை ஒரு விளம்பரத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.
ஈரோடு காவல்துறை வெளியிட்டிருக்கும் நகைச்சுவை கருத்துப் படத்தில், பைக் ஓட்டுவது நீ.. அபராதம் கட்டரது நானா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், என்னோட வண்டியை நீ கேட்கும் போது, ஹெல்மெட் போட்டுப் போக சொன்னேன் கேட்டியா!
இதையும் படிக்க | பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்போர் அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களும்..
செல்போனுக்கு அபராதம் கட்ட சொல்லி மெசேஜ் வந்துருக்கு..
வாகன உரிமையாளர் வாகனத்தை மற்றவரிடம் கொடுக்கும் போது விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வாகனத்தை யாராவது இரவல் கேட்டு வாங்கிச் சென்றால், அவர்கள் சரியாக சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டவும், தலைக்கவசம் அணிவதை உறுதி செய்து கொள்வதும், வாகன உரிமையாளரின் கடமை என்று ஈரோடு காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
காவல்துறை தனது கடமையைச் செய்துள்ளது. வாகனத்தின் சாவியை பிறரிடம் கொடுக்கும் போது நாம் தான் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், வாகனத்தைக் கொடுத்ததற்கு அபராதம் செலுத்தத் தயாராக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.