'பள்ளி நிர்வாகம் தவறு செய்ததால் தான்  சிசிடிவி காட்சிகள் தர மறுப்பு': பரபரப்பு குற்றச்சாட்டு

'பள்ளி நிர்வாகம் தவறு செய்ததால் தான் சிசிடிவி காட்சிகள் தர மறுப்பு': பரபரப்பு குற்றச்சாட்டு

தனியார் பள்ளி நிர்வாகம் தவறு செய்ததால் தான் சிசிடிவி காட்சிகளை தர மறுப்பதாக மாணவியின் தாயார் செல்வி குற்றம் சாட்டியுள்ளார்.
Published on

சென்னை: தனியார் பள்ளி நிர்வாகம் தவறு செய்ததால் தான் சிசிடிவி காட்சிகளை தர மறுப்பதாக மாணவியின் தாயார் செல்வி குற்றம் சாட்டியுள்ளார்.
 

முதல்வர் ஸ்டாலினை கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர்.

உயிரழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தந்தை, சகோதர் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். உயிரழந்த மாணவியின் தாய் செல்வியிடம் ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறியுருந்தார்.

மாணவி உயிரழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என முதல்வர் உறுதி கூறியிருந்தார். 

முதல்வரை சந்தித்த மாணவியின்  தாயார் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தனது மகள் மரணத்தில் குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம்.  குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்  என முதல்வர் உறுதி தந்தார்.

மேலும், தனது மகளின் இறப்புக்கும்  நீதி கிடைக்கும் என்று முதல்வர் உறுதி அளித்ததாக மாணவியின் தாயார் செல்வி தெரிவித்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com