காரில் கூகுள் மேப் பார்த்துச் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூகுள் மேப் பார்த்து காரில் சென்று கொண்டிருந்த நான்கு பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து கர்நாடக மாநிலம் சர்ஜாபூருக்கு ராகேஷ் என்பவர் தனது குடும்பத்தினர் மூவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கூகுள் மேப் உதவியுடன் அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது, வழியில், தரைப்பாலத்தை தாண்டி ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டது.
இதையும் படிக்க.. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல: உயா்நீதிமன்றம்
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காரில் சிக்கியிருந்த ராகேஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் பத்திரமாக மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொணடது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.