கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

101-ஆவது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலைகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 101 ஆவது நாளாக மாற்றம் இல்லாமல் செவ்வாய்க்கிழமை (ஆக.30) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆக விற்பனையாகிறது.

News image
101-ஆவது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலைகள் (கோப்புப்படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 10:11 am

DIN


சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 101 ஆவது நாளாக மாற்றம் இல்லாமல் செவ்வாய்க்கிழமை (ஆக.30) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆக விற்பனையாகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. 

கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 9 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.7.50 ஆகவும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் (மே. 22) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.6.70 காசு குறைந்து ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

அதன்பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. அதன்படி, இன்று 101 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.