மாண்டஸ் புயலினால் விழுந்த 644.60 மெ.டன் மரக்கழிவுகள் அகற்றம்

சென்னையில் மாண்டஸ் புயலினால் விழுந்த 644.60 மெ.டன் எடையுள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட்டன.
மாண்டஸ் புயலினால் விழுந்த 644.60 மெ.டன் மரக்கழிவுகள் அகற்றம்
Published on
Updated on
1 min read

சென்னையில் மாண்டஸ் புயலினால் விழுந்த 644.60 மெ.டன் எடையுள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீா்செய்ய பல்வேறு விதமான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக காற்றின் அதிக வேகத்தின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன.

15 மண்டலங்களில் 207 மரங்கள், நூற்றுக்குமேற்பட்ட மரகிளைகளும் சாலையில் விழுந்தன 1,2,3 மற்றும் 7ல் சென்னை என்விரோ நிறுவன தூய்மைப் பணியாளா்களும், மண்டலங்கள் 4,5,6 மற்றும் 8ல் மாநகராட்சிப் தூய்மைப் பணியாளா்களும், மண்டலம் 9 முதல் 15 வரை உா்பேசா் நிறுவன தூய்மைப் பணியாளா்களும் இப்பணிகளில் ஈடுபட்டனா்.

ஞாயிற்றுகிழமை பகல் 2 மணி வரை 644.60 மெட்ரிக் டன் எடையுள்ள மரக்கழிவுகள் 100 டிப்பா் லாரிகளின் மூலம் 291 நடைகளாக மாநகராட்சியின் கொடுங்கையூா் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக 13-ஆவது மண்டலத்தில் 36 நடைகளாக 104.36 மெ.டன் மரக்கழிவுகளும் குறைந்தபட்சமாக 2-ஆவது மண்டலத்தில் 3 நடைகளாக 10.91 மெ.டன் மரக்கழிவுகளும் அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com