நாராயணசாமி நாயுடு நினைவு நாள்: டிச.21-ல் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் போராட்டம்!

சூலூரில் நாராயணசாமி நாயுடு  நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 21-ம் தேதி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 
நாராயணசாமி நாயுடு நினைவு நாள்: டிச.21-ல் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் போராட்டம்!
Published on
Updated on
1 min read

சூலூரில் நாராயணசாமி நாயுடு  நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 21-ம் தேதி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கராஜ்  முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சூலூர் சுல்தான்பேட்டை கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது, 

வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி விவசாயிகள் தலைவர் நாராயணசாமி நாயுடு 38 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தன்று வழக்கமாக சூலூரில் இருந்து வையம்பாளையம் வரை ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் மாநில அரசு தற்போது இலவச மின்சாரத்திற்கு ஆதாரங்களுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அன்னூர் வாரப்பட்டி தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க முயற்சி செய்கிறது. 

இது முற்றிலும் விவசாயிகளை வஞ்சிக்கும் மனப்போக்குடன் எடுக்கப்பட்ட முடிவு. இதனை கட்சி சார்பற்ற விவசாய சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. விவசாயிகள் சங்கம் தொழில் வளர்ச்சியை ஆதரிக்கிறது, அதே நேரத்தில் விவசாய நிலங்களை அழிப்பதை எதிர்க்கிறது. பாமாயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் வெளிநாட்டு விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர். அதற்கு பதிலாக உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும்போது விதமாக தேங்காய் பொருட்களை விவசாயிகள் இடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். 

தென்னை வாரியத்தை உடனடியாக மாநில அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தன்று டிசம்பர் 21ஆம் தேதி சூலூர் தாலுகா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com