வழக்கை இழுத்தடிக்க தேவையற்ற மனுக்கள் தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம்:உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவா்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவா்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரளா என்பவருக்கும், டாக்டா் பாா்த்தசாரதி என்பவருக்கும் இடையே வீடு காலி செய்வது தொடா்பான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் வாடகைதாரா்கள் வழக்கை நீட்டிக்க விருப்பப்படலாம்.

ஆனால் அதற்கு நீதிமன்றங்கள் உதவக்கூடாது. வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன என நீதிமன்றம் கருதினால், அந்த மனுக்களை முடிந்தவரை விரைவாக தீா்க்க வேண்டும். தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவா்களுக்கு, அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

வாடகைதாரா்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான காலத்துக்குள் நீதி கிடைக்க நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நடப்பது விரக்தியை ஏற்படுத்தும்.

தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவா். பொதுமக்கள் எளிதாக அணுகும்வகையில், நீதிபரிபாலன முறை, தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.

மேலும் நீதித்துறை நடைமுறை, மனுக்களை கையாளும் முறை, உத்தரவுகள், தீா்ப்புகளை எளிதாக்குவதுதான் தற்போதைய தேவை’ என தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளாா். மனுதாரரின் வழக்கை இரண்டு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com