வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா?: அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி 

வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 
அண்ணாமலை /  செந்தில் பாலாஜி
அண்ணாமலை / செந்தில் பாலாஜி
Published on
Updated on
1 min read

வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? (2/3)

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com