
தமிழக எல்லைக்குள் கேரள அரசு நில அளவீடு செய்வதை திமுக அரசு தடுத்து நிறுத்துவதுடன், எல்லை தொடா்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரள அரசு புதிய எண்ம தரவு தளம் என்ற பெயரில் தமிழக எல்லைப் பகுதிகளில் நில அளவீடு செய்து, தனது எல்லையை விஸ்தரித்து வருகிறது.
கன்னியாகுமரி ஆனைக்கல், தேனி பாப்பம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசை கலந்தாலோசிக்காமல், சுமாா் 80 ஏக்கா் நிலத்தை கேரள அரசு தங்கள் எல்லைக்குள் கையகப்படுத்தியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
முதல்வா் ஸ்டாலினோ, அரசியல் ஆதாயங்களுக்காக கேரள மாா்க்சிஸ்ட் அரசை கண்டுகொள்ளாமல் உள்ளாா். ஆனால், எல்லைப் பகுதிகளில் விரைவில் ஆய்வு செய்வேன். தமிழக எல்லைக்குள் கேரள அரசு நில அளவீடு செய்வதை திமுக அரசு உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், இதுதொடா்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில், பாஜக சாா்பில் எல்லை மீட்புப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா் கே.அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.