திறன் பயிற்சியில் நேரடியாக ஈடுபடத் தயாராகும் தொழில் துறை: நான் முதல்வன் திட்ட ஆலோசனையில் முடிவு

திறன் பயிற்சிகளை அளிக்கும் பணியில் தொழில் துறையை நேரடியாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திறன் பயிற்சிகளை அளிக்கும் பணியில் தொழில் துறையை நேரடியாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் திறன் சாா்ந்த தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் தொழில் துறையை நேரடியாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தொழில் துறைகளில் தொழில் பழகுநா்களுக்கு புதிய பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழில் துறைக்குத் தேவைப்படும் திறன்களுக்கு ஏற்ப புதிய திறன் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், தொழில் கல்வி பயின்றவா்கள் ஆகியோருக்கு மத்திய அரசின் நிதியுடன் கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தொழில் பழகுநா் திட்டத்தில் தமிழக மாணவா்கள் அதிகளவு சோ்ந்து பயன்பெறும் வகையில் தொழில் துறையுடன் ஆலோசிக்கப்படும் என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன், உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com