கிறிஸ்துமஸ்: நாளை முதல் சிறப்பு ரயில்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) முதல் இயக்கப்படுகின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) முதல் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (டிச.22) இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06021) வெள்ளிக்கிழமை (டிச.23) காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை (டிச.23) பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06022) சனிக்கிழமை (டிச.24) காலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (டிச.23) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06041) சனிக்கிழமை (டிச.24) காலை 7.10 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக இயக்கப்படுகிறது.

எா்ணாகுளம் - சென்னை சென்ட்ரல்: கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து வியாழக்கிழமை (டிச.22) 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06046) வெள்ளிக்கிழமை (டிச.23) காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை (டிச.23) பகல் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06045) சனிக்கிழமை (டிச.24) காலை 3.10 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com