தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தியாகராசர் கல்வியியல் கல்லூரியில் இராமானுஜம் பிறந்தநாள்

மதுரை, தியாகராசர் கல்வியியல் கல்லூரி சிறந்த கணிதமேதை சீனிவாச  இராமானுஜம் பிறந்தநாளை தேசிய கணித தினமாக இன்று கொண்டாடப்பட்டது.

News image

இராமானுஜம் பிறந்தநாள் நிகழ்ச்சி

Updated On :23 டிசம்பர் 2022, 1:04 pm

DIN

மதுரை, தியாகராசர் கல்வியியல் கல்லூரி சிறந்த கணிதமேதை சீனிவாச  இராமானுஜம் பிறந்தநாளை தேசிய கணித தினமாக இன்று கொண்டாடப்பட்டது.

சிறந்த கணித மேதை சீனிவாச இராமானுஜம் பிறந்தநாளை தேசிய கணித தினமாக மதுரையில் அமைந்துள்ள தியாகராசர் கல்வியியல் கல்லூரியில், இன்று வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தலைமை விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராகவும் முனைவர் ஏ.சி.நக்சத்ரா எம்.ஏ.எல்.எல்.பி வழக்கறிஞர், ஊக்கமளிக்கும் பேச்சாளர், உலகசாதனையாளர், நினைவாற்றல் பயிற்சியாளர் மற்றும் அவரது மகள் செல்வி நவ்யா உலகசாதனையாளர், தியாகராசர் கல்லூரியின் கணிதம் மற்றும் கணினி அறிவியலின் முதலாம் ஆண்டு மாணவர் ஆசிரியர்கள் 23 டிசம்பர் 2022 அன்று தேசிய கணித தினத்தை நடத்தினர். 

கல்லூரி முதல்வர் முனைவர் சீ. பிரகாஷ் அழைப்பாளராகவும் முனைவர் ச. அன்பழகன் மற்றும் த. ஞானப்பிரகாசம் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

Story image

எங்கள் மாணவர் ஆசிரியர்கள் தீபா மற்றும் யோகேஷ் ஆகியோர் தலைமை விருந்தினரை வரவேற்றனர். நிகழ்ச்சியை மாணவ ஆசிரியை அர்ச்சனா தொகுத்து வழங்கினார். தலைமை விருந்தினரை மாணவ ஆசிரியை சினேகா வரவேற்புரையாற்றினார்.

முனைவர் ஏ.சி. நக்சத்ரா மாணவர் ஆசிரியரிடம் "ஆசிரியரின் பங்கு மற்றும் மதிப்புகள்" என்னவென்பதை பற்றி உரையாற்றினார்.

மேலும் மாணவர்களிடையே நல்ல உறவைப்பேணுவதற்கு மாணவ ஆசிரியர்களை ஊக்குவித்தார் மற்றும் சிறந்த கணிதவியலாளர் இராமானுஜம் பற்றி உரையாற்றினார். 


நவ்யா தனது சாதனைகள் குறித்தும் தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். மாணவ ஆசிரியர்கள் உதயகுமார்  மற்றும் சங்கீதா தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். 

இறுதியாக கவிமுகிலன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், மாணவ ஆசிரியர்களால் தேசியகீதம் பாடி இந்நிகழ்ச்சியை நிறைவுசெய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.