ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கியது!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழா தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழா தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மைத் திருத்தலம், பூலோக வைகுந்தம், பெரியகோயில் எனப் பக்தா்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை காலை விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.
வெள்ளிக்கிழமை காலை விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.

அதன்படி இவ்விழா வியாழக்கிழமை (டிச.23) இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 7.45 மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகத்தின் அபிநயமும், வியாக்யானமும், 9 மணி முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்தலும் நடைபெற்றது. 

காலை 7.15 முதல் 11.30 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்யலாம் - பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை தரிசனம்.

இரவு 7 மணிக்கு அர்ஜுனா மண்டபத்தில் இருந்த புறப்பட்டு நம்பெருமாள் மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார்.

வெள்ளிக்கிழமை தொடங்கி ஜனவரி 1 வரை நடைபெறவுள்ள பகல் பத்து விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறாா்.

பகல்பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத்  தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து முதல் நாள் வெள்ளிக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் இரத்தின நீள்முடிகிரீடம் , இரத்தின அபயஹஸ்தம் , கபாய் சட்டை , நெல்லிக்காய் மாலை ,காசு மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் 
 அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களாக கரோனா கட்டுப்பாடால் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு கரோனாவின் தளர்வுகள் முழுவதுமாக நீக்கப்பட்டு  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com