கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும்?  

பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 
கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும்?  


பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்புடன் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்ட ஒரு தலா கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசுத் தொகுப்பான அரிசி, சா்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் திங்கள்கிழமை(டிச.26) முதல் நடைபெறுகிறது. 

இந்நிலையில், பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வழக்கம் போல் டோக்கம் முறை செயல்படுத்தப்படுகிறது. 

வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பொங்கல் தொகுப்பு பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக சென்று நியாய விலைக்கடை ஊழியர்கள் டோக்கனை வழங்குகிறார்கள்.

இது குறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும்.  

குடும்ப அட்டை உறுப்பினர்கள் வெளியூர் சென்றிருந்தாலோ, வீடு பூட்டி இருந்தாலோ அவர்கள் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு அவகாசம் கொடுக்கப்படும். குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பெற முடியாது. 

நியாய விலைக்கடைகள் மூலம் ஊழியர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்கும் இடம் அளிக்காமல் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com