தமிழகத்தில் 4,517 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ சான்று

தமிழகத்தில் இதுவரை 4,517 நியாய விலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 4,517 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ சான்று

தமிழகத்தில் இதுவரை 4,517 நியாய விலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் 35,000 நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் 25,000 கடைகள் முழு நேரக் கடைகளாகவும், 10 ஆயிரத்துக்குள்பட்ட கடைகள் பகுதி நேரக் கடைகளாகவும் இயங்கி வருகின்றன.

இந்தக் கடைகளுக்கு பொது மக்கள் அமைதியான சூழலில் வந்து பொருள்களைப் பெற்றுச் செல்லும் வகையில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நியாய விலைக் கடைகளின் கட்டடங்கள் இடிந்த நிலையிலோ, வா்ணம் பூசப்படாமல் இருந்தாலோ அவை சீரமைக்கப்பட்டு புத்தம் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கிராமப்புறங்களில் உள்ள கடைகள் சீரமைக்கப்பட்டு அவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உறுதுணையுடன் தூய்மை கெடாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடைகளில் மக்களைக் கவரும் வகையில் ஓவியங்கள், வாசகங்கள் போன்றவை இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், புதுப்பிப்புப் பணிகள் குறிப்பிட்ட அளவுக்கு இலக்கை எட்டியுள்ளன.

இதுகுறித்து துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

சென்னை கோபாலபுரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான கிடங்கும், மண்டல அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இவற்றை புதுப்பொலிவாக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, சென்னை அண்ணாநகரிலும் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. அதுவும் புத்தம் புதிதாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்துக்கும் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறும் பணிகளை கூட்டுறவு, உணவுத் துறை தொடக்கியுள்ளது. அதன்படி, இதுவரையிலும் 4, 517 நியாய விலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றுகள் பெறப்பட்டுள்ளன. 2,800 கடைகள் மக்களைக் கவரும் வகையில் புதுப்பொலிவு பெற்று இருக்கின்றன.

மக்கள் நிம்மதியாகச் சென்று எந்த அழுத்தமும் இல்லாமல் நியாய விலைக் கடைகளில் பொருள்களை வாங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com