தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஆசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டி: காஞ்சிபுரம் மாணவி முதலிடம்!

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி நீனா(19) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

News image

ஆசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் நாட்டிற்கு பெருமை சேர்ந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி நீனா(வலது)மற்றும் சரத்ராஜ்

Updated On :26 டிசம்பர் 2022, 8:39 am

காஞ்சிபுரம்:  தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி நீனா(19) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த மாணவியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டினார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்து வருபவர் நீலகண்டன் மகள் நீனா(19"). இவர் தாய்லாந்தில் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்ற ஆசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டி நடைபெற்றது. சீனா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் உள்பட 20 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் காஞ்சிபுரம் மாணவியான நீனா முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

இதேபோன்று காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூரில் உள் அக்சயா கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வருபவர் வெங்கடேசன் மகன் சரத்ராஜ்(19). இவரும் ஆசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

நாட்டிற்கு பெருமை சேர்த்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இரண்டு பேரையும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார். 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ரமேஷ், கிக்பாக்சிங் பயிற்றுநர் அருண் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.