சுனாமி 18ம் ஆண்டு நினைவு நாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி!

இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி, ஆயிரம் பேரை அடக்கம் செய்த சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை, உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் சி.இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் சி.இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி, ஆயிரம் பேரை அடக்கம் செய்த சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை, உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மாலை அணிவித்தும், பத்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்தும் உறவினர்கள்

இன்று உலகம் முழுவதும் 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி தாக்கியதில் உலகம் முழுவதும் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. தமிழகத்தில் உயிரிழந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 6065 பேர் உயிரிழந்தனர்.

18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி வேளாங்கண்ணியில் நடைபெற்ற நினைவு அமைதி ஊர்வம்.

ஆயிரம் பேரை அடக்கம் செய்த சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை,

இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் சி.இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

வேளாங்கண்ணி கடற்கரையில் மலர்தூலி அஞ்சலி செலுத்துபவர்கள்

இதுபோல் வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த ஆயிரத்திற்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த வேளாங்கண்ணி ஆர்ச்யில் உள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. 

சுனாமி ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தும் உறவினர்கள்.

சுனாமியில் இறந்தோருக்கு திதி கொடுக்கும் பெற்றோர்கள்.

சுனாமியில் இறந்தோருக்கு திதி கொடுக்கும் உறவினர்கள்

ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதிப்  பேரணியாக சென்று சுனாமி ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர்.

சுனாமி ஸ்தூபியில் அஞ்சலி செலுத்துபவர்கள்.

சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்து நிலையிலும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்திருந்தவர்கள், இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலைகளை வைத்தும், அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com