செங்கல்பட்டில் மதுக்கடைக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்

செங்கல்பட்டு அருகே அரசு மதுபானக் கடை இருந்ததால் புதன்கிழமை கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் மதுக்கடைக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அரசு மதுபானக் கடை இருந்ததால் புதன்கிழமை கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அருகே மேலமையூர் பகுதியில் புதன்கிழமை புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடை திறக்கப்பட்டால் இளைஞர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பள்ளி, கோயில்கள் அருகே மதுக்கடை திறக்கக் கூடாது எனக் கூறி மேலமையூர் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் போராட்டம்  2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு நகரில் மதுபான கடையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மூன்று மதுபான கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார் .

அதில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு கடை மட்டுமே மேலமையூர் பகுதியில் திறக்கப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. 

மீதமுள்ள இரண்டு மதுபான கடையும் செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் சாலையில் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து மூன்று அரசு மதுபான கடை ஒரு சாலையில் திறக்கப்பட இருப்பதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com