காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றங்கள் நடந்தால் அதுகுறித்து விரிவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் மாவட்டம் முழுவதும் பொருத்தப்பட்டிருப்பதாக எஸ்பி எம்.சுதாகர் சனிக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5.935 கண்காணிப்பு கேமராக்களும், 65 சிறப்பு கேமராக்களும் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தப்பிக்கவே முடியாது. குற்றங்களைத் தடுக்கவே இவை பொருத்தப்பட்டிருக்கின்றன.புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை 16 இடங்களிலும், மாவட்ட எல்லையில் 14 இடங்களிலும் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆலயங்களுக்கு புத்தாண்டு தினத்தன்று வந்து செல்லும்போது எந்தவித இடையூறும் இல்லாமல் வந்து செல்ல சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
568 சமூகப் பாதுகாப்பு குற்றவாளிகள், 229 சொத்துக்களை கொள்ளையடித்த குற்றவாளிகள் உள்பட 800 குற்றவாளிகளை கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களது தோற்றம், புகைப்படம் ஆகியவற்றை ஆவணப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். புத்தாண்டு தினத்தன்று இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்லவும்,பைக்ரேஸ் செல்லவும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் 7 மற்றும் 40 இருசக்கர வாகனங்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.
பொதுமக்களுக்கு ஏதேனும் சமூக விரோதிகளால் தொந்தரவு ஏற்பட்டால் ஹலோ போலீஸ் எண் 9498100260 என்ற கைபேசியிலும், காவல் கட்டுப்பாட்டு அறை எண் 044-27236111 மற்றும் 044-27238001 என்ற எண்களிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் எஸ்பி.எம்.சுதாகர் தெரிவித்தார். பேட்டியின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சந்திரசேகரன், வினோத் சாந்தாராம், பாலகுமார் ஆகியோர் உள்பட பலரும் உடன் இருந்தனர்.
படவிளக்கம்}
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


