
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை இரவு முதல் கொண்டாட்டங்கள் நடந்தன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் மக்கள் பங்கேற்றனர்.
ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பொது இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
கொண்டாட்டத்தின் போது பெரும் அசாம்பாவிதங்களைத் தவிா்க்க சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா, பெசன்ட்நகா் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்களில் காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வாகன ஒட்டிகள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிா்க்க இரவு முழுவதும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.